இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை!

மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் மெமோ ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழ்நாடு வந்த பொழுது பொதுமக்கள் அவரிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இதை பற்றி பேசி வேண்டுகோளாக இம்மாதம் 18ம்தேதி முன்வைத்தார்.

 

அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை அறிவித்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:-

மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மேட்டுபாளையம் - கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் தினசரி சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஸ்ணவ் ஜி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவைக்கான ரயில் சேவைகள் தரம் உயர்த்துவது, விரிவு படுத்துவது குறித்து பாஜக சார்பில், குறிப்பாக வானதி ஸ்ரீனிவாசன் தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.