நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கவேண்டும் என்ற இலக்குடன் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டது. 


கோவையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் பொருத்தப்பட்டு அதன்சேவைகள் துவங்கப்பட்டது. 


குறிப்பிட்ட அளவு நாணயங்களையோ அல்லது ரூபாய் நோட்டை இந்த கருவியில் செலுத்தி பொதுமக்கள் மஞ்சப்பைகளை பெற்றுக்கொள்ளலாம். 

கோவையில் அமைக்கப்படும் முதல் மஞ்சப்பை இயந்திரம் இதுவே. இதை தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் அமைத்துள்ளனர். 

மேலும் இதுபோன்ற இயந்திரங்கள்  ஆர்.எஸ். புறம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகள் உள்பட 5 இடங்களில் விரைவில் வைக்கப்பட உள்ளது. அத்துடன் கூடுதலாக கோவை மாநகராட்சிக்கு 5 இயந்திரங்கள் வழங்க பட உள்ளது. 

இந்த் 5 இயந்திரங்களை பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.