மினி பஸ் சேவை துவங்குவது எப்போது? அமைச்சர் சிவசங்கர் சொன்ன புது தகவல்!
- by David
- Apr 23,2025
கோவை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மினி பஸ் சேவையை அரசு மீண்டும் கொண்டுவரவுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத வழித்தடங்களை கண்டறிந்து அங்கு மினி பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
சென்ற மாதம் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாவட்டத்தில் இயக்கப்படவுள்ள மினி பஸ் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 29 வழித்தடங்களில் மினி பஸ் சேவைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத 65% இடங்கள் பயன்பெறவுள்ளது.
இந்நிலையில் வரும் மே மாதத்தின் 2ம் வாரத்தில் தமிழகத்தில் மினி பஸ் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கிவைக்கவுள்ளார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.