இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாநகரமும் எந்த அளவு வாழ்வதற்கு எளிதாக இருக்கிறது என்ற ஒரு மாநகரில் வாழும் குடிமகன் அந்த மாநகர் மீது உள்ள உண்மையான மனநிலை என்ன என்பதை அறியும் நோக்கில் இந்த பொது கருத்து கேட்பு/ மதிப்பாய்வு நிகழ்வு தற்போது பிரத்தியேகமாக இணையதளத்தில் துவங்கி இருக்கிறது.

நீங்கள் கோவை மாநகரில் குறைந்தது 6 மாத காலங்கள் வாழ்ந்து வருபவராக இருந்தால், கீழ்காணும் போஸ்டரில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய QR CODE அல்லது இணையதள முகவரியை பதிவு செய்து அதில் நீங்கள் காணும் இந்த போஸ்டரில் வழங்கப்பட்டிருக்கும் ULB CODE யையும் பதிவு செய்து கோவை மாநகரின் மின்சார விநியோகம் எப்படி இருக்கிறது?, குடிநீர் விநியோகம் மற்றும் தரம் எப்படி இருக்கிறது? இங்கு சாலைகள் எப்படி இருக்கிறது? இங்கு பாதுகாப்புகள் பொதுமக்களுக்கு எப்படி இருக்கிறது? என்பது குறித்து உங்களுடைய மதிப்பெண்களை விருப்பங்களாக இந்த கருத்து கேட்பு ஆன்லைன் படிவத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த கருத்துகேட்பில் 15க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளது.

நீங்கள் இதில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்த பின்னர் உங்களுக்கு அரசு சார்பில்  ஆன்லைன் சான்றிதழ் வழங்கப்படும். நீங்கள் பதிவு செய்யும் இந்த கருத்துகள் நம் மாநகரை தரம் உயர்த்த உதவும்.