டெல்லியில் பிரதமரை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரிடம் மத்திய அரசிடம்  முன்வைத்துள்ள பல கோரிக்கைகளைப் பற்றி பேச இருப்பதாக டெல்லியில் பத்திரிகையாளர்களை இன்று  சந்தித்த பொழுது தெரிவித்தார்.

நீட், புதிய கல்விக் கொள்கை, மின்சாரம், காவேரி-மேகதாது  சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை பற்றி மீண்டும் நினைவூட்ட போவதாக அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி சென்றார், அங்கு அவர் புதிதாக பதவியேற்றுள்ள குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அவர்களின் பதவி ஏற்பிற்கு நேரடியாக வர முடியாததால் இன்றைக்கு நேரடியாக நேரம் கேட்டு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.


இருவருமே மகிழ்ச்சியாகவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சி சூழ்நிலைகளை பற்றி கேட்டிருந்ததாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் இருந்ததாக தெரிவித்தார்.


இன்று மாலை 4 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ள அவர் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழை தான் நேரில் சென்று தர முடியாத சூழல் இருந்த போதிலும்  அதனை நேரில் வந்து துவக்கி வைத்ததற்காக தன்னுடைய நன்றிகளை பிரதமருக்கு சந்திப்பின்போது தெரிவிக்க போவதாகவும் கூறினார்.

மேலும் இன்று இரவே சென்னையும் அவர் திரும்பவார் என்று தெரிவித்தார்.