ரூ.971 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

 

பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் நாடாளுமன்ற கட்டடப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களை கெளரவிக்கவும் திட்டம் வகுத்துள்ளனர்.

 

ஆனால் இந்த திறப்பு விழாவை காங்கிரஸ் உள்பட 19 எதிர்கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

 

"நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டிடத்திற்கு மதிப்பில்லை. புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எங்கள் கூட்டு முடிவை நாங்கள் அறிவிக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டன.


ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைப்பது தான் சரியாக இருக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.