கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 8000 சுகாதார தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு மருத்து முகாமினை இன்று நடத்தியது. 

 

 

இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 

 

முகாமை துவக்கி வைத்தபின், நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பேசியதாவது:-

கோயம்புத்தூர் மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். 

 

மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சி கட்டமில்லா முழு உடல் பரிசோதனை முகாம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படுகிறது. 

 

இந்த மருத்துவ முகாமில் இரத்த கொதிப்பு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை  செய்யப்பட்டு தொடர் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு தொடர் சிகிச்சையும் கட்டணமில்லாமல் மேற்கொள்ளப்படும்.

 

தூய்மைப்பணியாளர்களின் உடல்நலம் மிகவும் முக்கியமானது. உடல்நலமும், சுகாதாரமும் முழுமையாக கிடைத்திட மாநகராட்சி நிர்வாகம் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

 

 இந்த மருத்துவ முகாமில் நாளென்றுக்கு 25 நபர்கள் வீதம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

முதற்கட்டமான மத்திய மண்டலத்தில் 1290 நபர்களுக்கு பரிசோதனை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

 

இதனை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். 

 

இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்த முகாமின் துவக்க நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொதுசுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.