மாநிலத்தில் விளையாட்டுத்துறையில் புதிய திட்டங்களை தொடங்கவும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை இன்று துவங்கப்பட்டுள்ளது. 


இந்த அறக்கட்டளை மூலம் விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளுக்கு உதவ இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலினும், விளம்பரத் துாதராக தோனியும் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நடந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோருடன் சர்வதேச கிரிக்கெட் உச்சநட்சத்திரமான தோனி கலந்துகொண்டு அறக்கட்டளையை துவக்கி வைத்தார்.