தைப்பூசத்தை முன்னிட்டு கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் முருகப்பெருமானின் தேர்த்திருவிழா நிகழ்வு நடைபெற்றது.

இன்று நடந்த தேர் ஊர்வலத்தில் பங்கேற்ற முருக பக்தர்களுக்கு அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தனர். 

கூட்டத்தின் நடுவே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நடந்து வந்த போது அவருக்கு இஸ்லாமியர்கள் தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்தனர்.