இன்றைய தினம் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது, தற்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

கோவையில் அனைத்து மக்களாலும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு, இனிப்பு, திரைப்படம் என கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ந்து வருகிறது. 

 

குறிப்பாக புதுமண தம்பதிகள் அவர்களது தல தீபாவளியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

 

புதுமண தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசி பெற்று பெரியவர்கள் எடுத்து தந்த புத்தாடையை அணிந்து கடவுளை வழிப்பட்டு பட்டாசுகளை விடுதி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

 

இது குறித்த அவர்கள் கூறுகையில்:-

 

புது உறவுகளுடன் தீபாவளியை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த தீபாவளி போல எல்லா நாட்களிலும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை அதிகம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.  

 

வரவிருக்கும் எல்லா நாட்களிலும் ஒற்றுமை உணர்வோடு ஒளிமிகு நாட்களாக அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.