நாளை (31.7.2025) முதல் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வந்ததால் குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஜூலை 23ம் தேதி முதல் அங்கு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு சூழல் சாதமாக மாறியுள்ளதால் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.