இன்னும் 2 நாட்களில் தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், பேருந்துகள் மூலமாகவும், ரயில்கள் மூலமாகவும் கோவையில் படிக்கும், பணிபுரியும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.மக்கள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் சேவை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முதலே பயணங்களை மக்கள் மேற்கொள்ள துவங்கிவிட்ட நிலையில் மாலை நேரங்களில் கோவை மாநகரின் சில முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் பண்டிகையை முன்னிட்டு இன்று மதியம் ரயிலில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் அதிக அளவில் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த பொங்கல் காலத்தில் சுமார் 2 லட்சம் பேர் கோவையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு பயன்படுவார்கள் என ஒரு தகவல் உள்ளது.