செப்டம்பர் 30ல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா  டில்லியில் நடைபெறுவதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் விழாவில்  விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. 

அந்த வகையில் நாட்டின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகள்  வெல்லும் படங்கள், நடிகர்கள் கலைஞர்கள் பட்டியல் அண்மையில்  அறிவிக்கப்பட்டது. 

அதில்  நடிகர் சூர்யா நடித்து, சுதா கொங்கரா இயக்கிய  'சூரரைப் போற்று' பல விருதுகளை பெருகிறதாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகர் விருது சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா பெறுகிறார், சிறந்த திரைக்கதை (தமிழ்) - சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர்  பெறுகின்றனர். சிறந்த பின்னணி இசை (தமிழ்) - சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் பெறுகிறார். சிறந்த நடிகை - சூரரைப் போற்று படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிப்பு; சிறந்த படத்துக்கான விருதை பெறுகிறது சூரரைப் போற்று.