கோவையில் நாளை 21.7.2025 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்
- by CC Web Desk
- Jul 20,2025
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திலும் மாநகரிலும் உள்ள துணை மின் நிலையங்களில் 30 நாட்களுக்கு 1 முறை மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்நாட்களில் இந்த துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமாக நடைபெறும் விநியோக பணிகள் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
அந்த வகையில் நாளை (21.7.25) கோவை மாநகரப் பகுதிக்குள் உள்ள துணை மின் நிலையங்களில் இது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு இல்லை.
அதுவே மாவட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்வினியோகம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பட்டணம் துணை மின் நிலையம்: பட்டணம் புதூர், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்திய நாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேட்ஸ் காலனி நெசவாளர் காலனி, வெள்ளலூர் (ஒரு பகுதி) பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.
கணியூர் துணை மின் நிலையம்: ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபா நகர், கொள்ளுப்பாளையம், சுப்பராயம்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் ஊத்துப்பாளையம்.