மின்சார கட்டணம் என்பது தமிழகத்தில் அரசியலாக்கப்படுகிறது என கோவையில் இன்று  பத்திரிகையாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

அ.தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மின்சார கட்டண உயர்த்துதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள மின் கட்டண மாற்றத்தால் வீடுகள் மற்றும் குடிசைகளில் இருக்கக்கூடிய 2.37 கோடி மின் நுகர்வோர்களில் ஒரு கோடி மின் நுகர்வோருக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் கிடையாது என்று கூறினார். இவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு ரூபாய் 55 உயர்த்தப்பட்டிருக்கிறது ( இரண்டு மாதங்கள் சேர்த்து).

சிறு, குறு, நடத்துற தொழிற்சாலைகளுக்கான அதிகமாக உள்ளது என்று முதல்வருடைய கவனத்திற்கு சென்றவுடன் ரூ.3217 கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய கட்டணங்கள் குறைக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

எனவே சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கும், HT தொழிற்சாலைகளுக்கும் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதே போல், விசைத்தறி நெசவாளர்களை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் அதற்கான கட்டணம் LT தொழிற்சாலை கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் தான் அதற்கென்று தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் என்பது 64% உயர்த்தப்பட்டு இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.