வெள்ளிக்கிழமை (19.3.23) அன்று ரிசர்வ் வங்கி ₹ 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கபடுவதாக அறிவித்தது. 

 

 

பொதுமக்கள் நலன் கருதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றும் வசதியை பெற ரிசர்வ் வங்கி வழிமுறை செய்துள்ளது. இம்மாதம் 23ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி துவங்கப்படும்.

 

 

இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:- 

 

 

₹ 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது. 

 

 

பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் ₹2000 நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக ₹ 2000 நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. 

 

 

எனவே செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் வரையில் ₹ 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.

 

 

₹ 500, ₹1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.

 

 

இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள ₹ 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம். 

 

 

இவ்வாறு அவர் கூறினார்.