நாளை ஞாயிறு முதல் கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. 

தினக்கூலியாக ரூ.323 பெரும் இந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 

அவர்கள் தரப்பில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமாக கூறியது என்னவென்றால் :

 தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தர முன் வரவில்லை. ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம், என்றனர்.




Source: Dinamani