கொலை, பாலியல் வன்முறை, சாலை விபத்து போன்ற சம்பவங்களால் வாழக்கையில் துயரம் அடைந்து வரும் மக்களுக்கு உதவவும், இந்த குற்றங்களை செய்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை கொடுத்து தப்பிக்க நினைப்போரை சட்டத்தின் முன்பு கொண்டுவர கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் ஜனவரி 2023ல் கவசம் அறக்கட்டளை அமைக்கபட்டது. 


இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக கோவை மாநகரின் பெரும் தொழில் அதிபர்களும் கல்வி நிறுவன தலைவர்களும் உள்ளனர்.


இதனால் தற்போது வரை குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் கல்வி, வேலைவாய்ப்பு, நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 


இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டதின் நோக்கம் வரும்காலங்களில் அதிகாரபூர்வமாக செயல்பட வேண்டி கடந்த புதன் (26.4.23) அன்று கோவை மாநகர காவல்துறையுடன் கவசம் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. 


அறக்கட்டளை தலைவரும் தொழிலதிபருமான ரவி சாம் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இருவரும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

 

இதனால் என்னென்ன நலன்கள் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் தெரியுமா?