ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

நேற்று கோவை மாநகரில் தங்கள் கைப்பேசிகளை பறி கொடுத்தவர்கள் மற்றும் தவறவிட்டவர்களிடம் அவர்கள் கைப்பேசிகளை வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் பேசும்போது ஆக்டோபஸ் மென்பொருள் பற்றி அவர் கூறியது:- 

 

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது உளவுத்துறை போலீசார் உடனடியாக போலீஸ் துறையினருக்கு தகவல்கள் அனுப்புவதற்கு இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 

 

 

 உளவுத்துறை போலீசாரின் வேலைப்பளுவை குறைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஆக்ட்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது. 

 

 

எப்போதும் வேண்டுமானாலும் இதிலிருந்து தகவல்களை போலீசார் வழக்கு சம்பந்தமாக எடுத்துக் கொள்ளலாம். 

 

 

போலீஸ் நிலையங்கள் இடையே தகவல்கள் பரிமாறி கொள்வதற்கும் இது உபயோகப்படுகிறது. ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயம் செய்யப்படுகிறது.

 

 

இவ்வாறு அவர் கூறினார்.