ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட் சிங்கப்பூரின் டெலியோஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து பிற்பகல் 2.20 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 

 

இது பி.எஸ்.எல்.வி-யின் 57-வது ராக்கெட் ஆகும். இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படக்கூடியது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.