பல்வேறு வசதிகளுடன் கோவையில் மொத்தம் 65 ஏக்கர் பசுமையான பரப்பளவில் அமைய உள்ள செம்மொழிப் பூங்காவிற்கான டெண்டர் ஜூன் 26ல் விடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இதன் விவரம் பின்வருமாறு:-

 

ரூ. 172 கோடியில் அமைய உள்ள செம்மொழிப் பூங்கா திட்டத்தை ஃபேஸ் ஒன் பேஸ் 2 என இரண்டாக பிரித்து செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

இதற்காக முதல் கட்டமாக ரூ. 43 கோடி நிதியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்து விட்டது.

 

இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக வரும் 26 ஆம் தேதி டெண்டர் விடப்படுகிறது.

 

பல்வேறு வசதிகளுடன் மொத்தம் 65 ஏக்கர் பசுமையான பரப்பளவில் பூங்கா அமைய உள்ளது.

 

 

செம்மொழி மாநாடு! 

 

கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை 5 நாட்கள் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் 9வது உலக தமிழ் மாநாடு கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. 

 

இந்த மாநாட்டை ஒட்டி கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரூ.500 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.