மருதமலை அடிவாரத்தில் வேல்கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 ½ அடி வெள்ளியால் செய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேலினை நேற்று (02/04/25) அன்று மதியம் சுமார் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் மருதமலை கும்பாபிஷேகத்திற்கு போடப்பட்டிருந்த பலத்த போலீஸ் காவலையும் மீறி திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்மை தகவல் - 3.4.25 - மதியம் 1.10 மணி

இது பற்றி இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. கோவை மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் திருடப்பட்ட வெள்ளி வேல் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் என தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.