மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஜாமினில் நேற்று விடுதலை ஆகியுள்ளார்.
17 மாதங்கள் சிறையில் இருந்த அவர் விடுதலை ஆனது ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஜாமின் மூலம் விடுதலை பெற வாய்ப்புள்ளதாக அவர் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பலமுறை வாய்தா கேட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. விரைவில் அவருக்கும் ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 12-ல் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்.