செப்டம்பர் 2020ல் காலமான இந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில், சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர்-செட்டிப்பாளையம் பஞ்சாயத்து இணைந்து பச்சபாளையம் கிராமத்தில் 1.8 ஏக்கர் நிலப்பரப்பில் எஸ்.பி.பி வனத்தை நிறுவியது.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 74 ஆண்டு வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒரு பிரமாண்ட இசைக் குறிப்பு அமைப்பில் 74 மரங்கள் நடப்பட்டன. 

 

நாளை (25.9.22) எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடைய இரண்டாவது நினைவு நாள் என்பதால் அதை அனுசரிக்கும் விதமாக சிறுதுளி அமைப்பு எஸ்.பி.பி. வனத்தில் அவருக்கு இன்று இசை அஞ்சலி செலுத்தியது.

 

இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஶ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 இந்த நிகழ்வினை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவக்கி வைத்தார். கோவையை அடித்தளமாக கொண்ட பாடகர்கள் பலரும் இசைத்து பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.