செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கப்பட இருக்கும் உலக இருதய தினத்தை முன்னிட்டு, இன்று கோவையில் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

 

இந்த பேரணியை எஸ். பி. டி மருத்துவமனையின் தலைவர் இருதய மரு. சுப்புராஜா தலைமையில் அரிமா சங்கம், எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் மற்றும் ஜே.கே. செவிலியர் கல்லூரி இணைந்து நடத்தியது.

 

 

 மத்திய மண்டல தலைவர் மீனா லோகநாதன் இந்த பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

 

 

 இதில் முக்கிய பங்குவகிக்கும் விதமாக மாநகராட்சி பணி குழு தலைவர் சாந்தி முருகன், 67-வார்டு கவுன்சிலர் வித்யா ராமநாதன்,ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

எஸ் .பி . டி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சுப்புராஜா கூடுகையில்:-

 

 

" இளவயதில் மாரடைப்பு இக்காலகட்டத்தில் அதிகரித்து வருவது மிக வேதனை அளிக்கிறது. இளைய தலைமுறையை பெரும்பாலும் ஈர்த்துவரும் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் ,துரித உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் தங்களது வாழ்நாள் எண்ணிக்கையைக் குறைத்து கொள்கிறார்கள்."

 

 

"நமது பாரம்பரிய வாழ்க்கை முறை கடைபிடிக்கப்படாமல் போகிறது. நாம் உழைத்து சேமிக்கும் அனைத்தும் கடைசியில் ஒரு நோய் கொண்டு செல்கிறது. இது போன்ற விழிப்புணர்வு பேரணிகளில் கலந்துகொள்வதால் நம் உடலை பற்றியும் நம் வாழ்க்கைமுறை நோய்களை பற்றியும் எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது. அளவான உணவு, சரியான நடைப்பயிற்சி ,நிம்மதியான உறக்கம் நாம் இன்றிலிருந்து கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்”, என்றார்.