கோவை காந்திபுரம் மேம்பால தாங்கு தூண்களை அழகு படுத்தவும், முக்கியமாக விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படமால் இருக்கவும் ஒரு தனியார் நிறுவனத்துடன் இனைந்து கோவை மாநகராட்சி நிர்வாகம் ஓவியங்கள் வரைய முயற்சிகள் எடுத்தன. இந்நிலையில் ஓவியங்களின் மேற்பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.



தூண்களில் வரையப்பட்ட ஒவ்வொரு ஓவியங்களின் மேற்பகுதியிலும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயர் வரையப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள மேம்பால தூண்களில் பிரதிபலன் பாராது ஓவியங்கள் வரைய பல கலைஞர்கள் இருந்த போதிலும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காகவே மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.