கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மூன்று நாட்கள் பயணம் செய்யப் போகும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (24.6.2022) கோவையில் ரூ.134 கோடி+ மதிப்பிலான 350 திட்டங்களை (நிறைவு பெற்ற திட்டங்களையும், புதிதான திட்டங்களையும் சேர்த்து) துவக்கி வைப்பதோடு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.

இதில் உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சேவையையும் நீர் சார்ந்த விளையாட்டுகளையும்  துவக்கி வைக்க உள்ளார். 

அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி. ரோட்டில் ரூ. 41 கோடி+ செலவில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தின் சேவையையும் துவக்கி வைக்க உள்ளார்.

இந்த வாகன நிறுத்துமிடத்தில் 300க்கும் அதிகமான வாகனங்களை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.