விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, முத்தண்ணன் குளங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கரைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து 5 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு சென்று குளங்களில் கரைத்தனர். இதற்காக, மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

 மேலும் விநாயகர் சிலை கரைப்பு நடந்த நீர்நிலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் இன்று ஒரே நாளில் மாநகரில் மொத்தம் 190க்கும் விநாயகர் சிலைகள்  பூஜிக்கப்பட்டு மீனவர்கள் துணையோடு கரைக்கப்பட்டது.

5-வது நாளான நாளை மறு நாள் மீதமுள்ள அனைத்து சிலைகளும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.