மாவட்ட அளவில் 115 கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனையைத் தடுப்பது மற்றும் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஆகிய நடவடிக்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியுள்ளார். 



கஞ்சா வியாபாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதில் கோவை மாவட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.



Image : Representational