நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்! வேளான்மைப் பல்கலைக்கழகம் வலியுறுத்தல்
- by David
- Jun 05,2023
தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் திங்களன்று உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழக பதிவாளர் இரா.தமிழ்வேந்தன் மற்றும் மகேஸ்வரி, பேராசிரியர் மற்றும் தலைவர் (சுற்று சூழல் அறிவியல் துறை) கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் ந.வெங்கடேச பழனிச்சாமி, பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை); முனைவர். M K கலாராணி, இயக்குனர் (பயிர் மேலாண்மை); முனைவர் ந.மரகதம், முதன்மையர் (மாணவர் நல மையம்); முனைவர் தே.சுரேஷ்குமார், இயக்குனர் ( வேளாண் ஊரக வளர்ச்சி); முனைவர் பாலசுப்ரமணியம் (தேர்வு கட்டுப்பாட்டாளர்) மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.