நாளை (9.8.2024) தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, போக்குவரத்தில் சில மாற்றஙகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி அவினாசி சாலை வழியாக தமிழக முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வர இருப்பதால், பொதுமக்கள் அவினாசி சாலையில் செல்வதை தவிர்த்து கீழ்க்கண்டவாறு மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, மற்றும் 100 அடி சாலையிலிருந்து அவிநாசி சாலை வழியாக ஈரோடு, சேலம் செல்லக்கூடிய வாகனங்கள் சத்தி ரோடு, கணபதி, சரவணம்பட்டி வழியாக காளப்பட்டி ரோடு, காளப்பட்டி 4 ரோடு வழியாக வீரியம்பாளையம் ரோடு, தொட்டிபாளையம் பிரிவு வழியாக அவிநாசி சாலையை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பொள்ளாச்சி, பாலக்காடு பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி. பூமார்க்கெட் சிந்தாமணி. D.B ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, சொக்கம்புதூர் வழியாகவும் அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு, இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ராமநாதபுரம் மற்றும் சுஙகம் பகுதியிலிருந்து CMC மருத்துவமனை, பெரியகடை வீதி, டவுன்ஹால் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் சுங்கம், வாலாங்குளம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.
மேலும், காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கோவை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து பயணத்தை இனிதாக்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாளை முதல்வர் வருகையால் கோவையில் போக்குவரத்து மாற்றம்
- by David
- Aug 08,2024