அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் நாளை( 26.04.2023) காலை 06.00 மணி முதல் நடைபெற இருப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தில், சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ரயில்நிலையம், டவுன்ஹால், உக்கடம், ஒப்பணக்கார வீதி, பேரூர் ரோடு, சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, மற்றும் நஞ்சப்பா ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 06.00 மணிமுதல் பகல் 02.00 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்ன மாற்றங்கள்? எங்கெங்கு மாற்றங்கள்?