கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாகனங்களை அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் அத்துமீறி நிறுத்தியிருப்பதை கோவை மாநகர காவல் துறையினரின் கவனத்திற்கு ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் நெட்டிசன் ஒருவர் புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு  சுட்டிக்காட்டினார். 

வாகனங்கள் அவ்வாறு நிறுத்திவைத்திருப்பதை அவர் புகைப்படத்துடன் காவல் துறை, மாநகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டர் ஆகியோரின் ட்விட்டர் பக்கத்திற்கு தெரியப்படுத்தினார்.
 

இதை காவல்துறையினர் சம்மந்த பட்ட துறையினரின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.  சம்மந்த பட்ட துறையினர் அந்த சர்விஸ் ரோடு முன்பு இருந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன்பு சர்விஸ் ரோட்டை பாதி அக்கரமித்த வாறு நிறுத்தப்பட்ட வாகனங்கள், அதற்கு பின் உணவு விடுதிமுன்பு வரிசையாக நிறுத்தப்பட்டது.


 இது பற்றி  சமூக அக்கறையுடன் செயல்பட்ட அந்த நெட்டிசனுக்கு மாஸ்-சாக ஒரு மாலை வணக்கத்தை சொல்லி, சரிசெய்யப்பட்ட சர்விஸ் ரோட்டின்  புகைப்படத்தை கோவை மாநகர காவல்துறையினர்  நேற்று மாலை 4.57 மணிக்கு அனுப்பியுள்ளனர். 

இவ்வாறு காவல் துறை  நடவடிக்கை எடுத்துள்ளது  மக்களிடம் காவல்துறையினரை முன்பை விட மிக எளிதில் அணுகமுடியும் எனவும், சமூக பிரச்சனைகளை அவர்களிடம் தெரிவித்தால் விரைவாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.