வரும் டிசம்பர் 24ம் தேதியில் தமிழக விளையாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார்.

 

டிசம்பர் 24 ஆம் தேதி இரவு கோவைக்கு வந்து சேர்ந்து, 25 ஆம் தேதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 

இங்கு நடைபெறும் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

25ஆம் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் மாலையில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் எனத் தகவல்கள் கூறுகிறது.

 

விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு  அவர் கோவை வருவது இதுவே முதல் முறை.