அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்க்ரீட் நிறுவனம் சார்பில் கோவை மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் இடையேயான இரட்டையர் பாட்மின்டன் போட்டி செப்டம்பர் 7ம் தேதி துவங்கி தற்போது இரண்டாவது லீக் போட்டிகள் 'Best of Three-knockout' முறையில் நடைபெற்றுவருகிறது. 

 

ஞாயிற்றுக்கிழமை மூன்று மேட்ச்கள் கேரளா கிளப் வளாகத்தில் நடைபெற்றது. இதில் காவல் துறையை சேர்ந்த மணிகண்டன்/யோகராஜ் ஜோடி, கேரளா கிளப்பை சேர்ந்த ஜெ.எம்.ஆர்/ கலை மற்றும் கோல்ட்/சிவா ஜோடி வெற்றி பெற்றது.

 

திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஆறு மேட்சுகளில் காவல்துறையை சேர்ந்த கோமதி/இளங்கோ ஜோடி, பிரின்ஸ்/விவேக் ஜோடி, சந்தோஷ்/மணிகண்டன் ஜோடி வெற்றி பெற்றது.

 

 

அடுத்த மூன்று மேட்சுகளில், கேரளா கிளப்பை சேர்ந்த சந்திப்/எஸ். ஆர். ராஜா ஜோடி, வினோத்/ராம் ஜோடி மற்றும் பாலா/திருக்குமரன் ஜோடி வெற்றி பெற்றது. 

 

 

இந்த இரண்டாவது லீக் போட்டிகள் முடிந்த பின் குவாட்டர் பைனல், அதன் பின்னர் இறுதி சுற்று நடைபெறும். செப்டம்பர் 25 ஆம் தேதி பரிசுகள் வழங்கும் விழா நடைபெறும்.

 

பொதுமக்கள் நலனுக்காக செயல்படும் மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் ஆகியோருக்குள் நல்ல அறிமுகம் மற்றும் உறவு இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.