ரூ.1621 கோடி மதிப்பில் 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு உப்பிலிபாளையம் சாலை சிக்னல் துவக்கத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை கட்டப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பாலத்தின் பிரதான சாலை பகுதிகளை 2024 டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க மாநில நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு திட்டமிட்டுள்ளது.

 

2020 டிசம்பர் மாதம் துவங்கிய இந்த கட்டுமான பணிகள் ஆகஸ்ட் 2024ல் முடிக்கப்படவேண்டும். 

 

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறைவடைய கால தாமதம் ஆகிவருகிறது. 2025 மார்ச் மாதத்தில் முக்கியமான அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நேற்று இந்த திட்டப் பணிகளை தமிழக அரசின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் இயக்குனர் சரவணன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். அவர் ஆய்வுக்குப் பின்பு இப்போது வரை அவிநாசி மேம்பாலத்தில் 72% பணிகள் முடிவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக நெடுஞ்சாலை துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.