கோவையின் குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றும் சிறுவாணி அணையில் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மொத்தம் 44.61 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நீர்மட்டம் தற்போது 22.37 அடியாக உள்ளது.

மேலும் கோவைக்கு தினசரி அணையிலிருந்து வழங்கப்படவேண்டிய 10 கோடி லிட்டர் குடிநீரின் அளவு தற்போது 6.3 கோடியாக உள்ளதாக தெரியவருகிறது. எனவே கோவை மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளவது சிறந்தது