கோவையில் இன்று மாலை முதல் பல இடங்களில் லேசான மின்னல் உடன் வானம் காணப்படும் நிலையில், அடுத்த சில நாட்கள் வானிலை எப்படி இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு படி அடுத்த 6 நாட்கள் - ஏப்ரல் 29 முதல் மே 4 வரை - கோவை மாவட்டத்தில் வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக வெப்பம் 36° முதல் 38° செல்ஸியஸ் வரை இருக்கவும், மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

கோவை வெதர் மேன் சந்தோஷ் மேற்கு மண்டலம் பற்றி கணித்துள்ளது என்னவென்றால் : அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில மேற்கு மண்டல பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மே 3ம் தேதியிலிருந்து மேற்கு மண்டலத்தில் வெப்ப சலன மழை பரப்பளவு அதிகரிக்கும். ஒரு சில பகுதிகளில் மே 3ம் தேதி முதல் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என அவர் கணித்துள்ளார்.