கோவையில் அடுத்த வார இறுதி வரை வானிலை எப்படி இருக்க வாய்ப்பு? இதோ தகவல்
- by David
- Jul 18,2025
Coimbatore
கோவை மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கு தென் மேற்கு பருவமழை சூழலை மீண்டும் அனுபவிக்கலாம்.
இந்த வார இறுதி (19.7.25) முதல் அடுத்த வார இறுதி (26.7.25) வரை கோவை மாநகரில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்யும். குளிர்ச்சியான, காற்று வீசக்கூடிய சூழல் நிலவும்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி-பாலக்காடு பகுதிகள் ஆகிய இடங்களிலும் நீலகிரி மாவட்டத்தில் மேற்கு பகுதிகளிலும் இந்த காலத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
நன்றி : @Kovairains/x