தற்போது நிலவும் கடும் பனி சூழல் எப்போது குறையும் என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இளம் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல தற்போது மழைக்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் வரும் 12ஆம் தேதி முதல் பொங்கல் வரை கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.