10 மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 8 வயது வயது கோவை சிறுவன்!
- by David
- Jun 05,2023
Coimbatore
கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-கிருத்திகா தம்பதியினர். இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு. 8 வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்ரீசாய், கடந்த 10 மாதங்களாக யோகா பயிற்சி எடுத்து அதை விரைவாக கற்று கொண்டு தேசிய,சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதுவரை சுமார் 23 போட்டிகளில் கலந்து கொண்ட ஸ்ரீ சாய் அனைத்து போட்டிகளிலும் பெரும்பாலும் முதல் பரிசையும் வென்றுள்ளார். 10 மாதங்களில் 23 பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்று குவித்துள்ள சிறுவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.