தமிழ்நாடு முழுவதும் மார்ச் 14ம் தேதி 11ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. 


கோவை மாவட்டத்தில் மொத்தம் 128 தேர்வு மையங்களில் மாவட்டத்தை சேர்ந்த 362 பள்ளிகளில் இருந்து 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர்.


இன்று மதியம் வெளியான தேர்வு முடிவுகளை பார்க்கையில் கோவை மாவட்டம்  95.73% தேர்ச்சி அடைந்ததாகவும், தேர்ச்சி பெட்ரா மாவட்டங்களில் மாநிலத்தில் 3 வது இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.