தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
 

மாநிலத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்த நிலையில் புதிதாக எந்த மாவட்டங்கள் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், ஆரணி, ஓசூர், பொள்ளாச்சி,  கும்பகோணம்,  கோவில்பட்டி, வடசென்னை, தென் சென்னை அந்த புது மாவட்டங்களாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

1868 ஆம் ஆண்டு கோவையை விட்டு நீலகிரி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. முன்பு கோவையின் ஒரு பகுதியாக இருந்த கரூரை திருச்சி மாவட்டத்துடன் இணைத்தனர். அதன் பின் கரூர் 1995ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் கோவையின் ஒரு பகுதியாக இருந்த திருப்பூர்  2009ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.