கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். திமுக பிரமுகரான இவர், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ற பெயரில் சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 66 வார்டில் ஜி.டி. நாயுடு தெரு என்ற பெயர் பலகை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த சாதி பெயரை ரகுநாத் கருப்பு மை பூசி அழித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்நிலையில் ஜிடி நாயுடு பெயரில் இருந்த சாதி பெயரை கருப்பு மை பூசி அழித்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறுகையில், “சாதி பெயரோடு தெருக்கள் இருக்கக்கூடாது என அரசாணை உள்ளது. அந்த தெருவின் பழைய பெயர் ஜி.டி. தெருதான். தற்போதுதான் நாயுடு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. எங்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த வார்த்தையை அழித்தேன். பாஜகவினரின் கருத்துகளை பார்த்தேன். அது அவர்களின் கருத்து. நான் தவறு செய்யவில்லை, நியாயப்படிதான் இதனை செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தகவல்: ABP Live