கோவையில் 700 க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

விளாங்குறிச்சியில் தமிழக அரசின் ELCOT சார்பில் அமைக்கப்பட்டுவரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் நிறைவடைய உள்ளது. அதை தவிர அரசு தரப்பில் 20 லட்சம் சதுரடியில் ரூ.1000 கோடி மதிப்பில் மிக பெரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளது. இங்கே அரசு தரப்பில் பிரமாண்ட டெக் சிட்டி திட்டமும் வரவுள்ளது. தனியார் தரப்பிலும் நிறைய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோவை சரவணம்பட்டி பகுதியில் 9 ஏக்கர் நிலத்தில் வின்ஃபிரா சைபர் சிட்டி எனும் மிக பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப வளாகத்தை KGiSL மற்றும் பி.என்.ஆர். எஸ்ட்டெஸ் ஆகிய நிறுவனங்கள் அமைக்க உள்ளனர்.

ரூ. 1000 கோடி மதிப்பில், மூன்று கட்டங்களாக அமைய உள்ள இந்த வளாகத்திற்கான சுற்றுசூழல் அனுமதி சான்றிதழ் (EC) பெற இரண்டு நிறுவனங்களும் சம்மந்தப்பட்ட அரசு துறையில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த வளாகத்தின் இரண்டு இடங்களில் தரைதளத்துடன் 10 தளங்கள் அமையவுள்ளன. இதன்  முதல் கட்ட பகுதி 2025 டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும்படி பணிகள் திட்டமிட்டுள்ளன.
 

இதனால் 7000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.