இன்று பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட், மால்கள் ஆகிய இடங்களில் பில் போடும் போது வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் அவர்களின் மொபைல் எண்னை கேட்டு பெறுகின்றனர். அது ஏன் என கேட்டால், பில் போட மொபைல் என் அவசியம் என்கின்றனர். 

இவ்வாறு மொபைல் எண்னை கடைகளுக்கு தந்த பின்னர் தான் வர்த்தக ரீதியான மார்க்கெட்டிங் அழைப்புகள், லோன் அழைப்புகள் என தேவையில்லாத அழைப்புகள் வருவதாகவும், குறுஞ்செய்திகள் வருவதாகவும் வாடிக்கையாளர்கள் உணர்கின்றனர். 


தனிப்பட்ட தகவலான செல்போன் எண்ணை விருப்பம் இல்லாமல் கடைகளில் தரவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாகவும் சாமானியர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை உணர்கின்றனர். 

இது போன்ற புகார்களை பரிசீலத்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், சில்லரை வியாபாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.


இது தொடர்பாக துறையின் செயலாளர் ரோகித் குமார் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சில வியாபாரிகள் கூறுகின்றனர்.

 இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாமற்ற செயல். இப்படி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்கி சேகரிப்பதில் பிரைவசி குறித்த ஐயமும் உள்ளது. இது தொடர்பாக ரீடெயில் விபாபாரிகள், சிஐஐ, பிக்கி போன்ற அமைப்புகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ரீடெயில் வியாபாரிகள் அவர்களின் மொபைல் எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழிமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.