2024 தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக) மற்றும் கலாமணி (நாதக) ஆகிய 4 வேட்பாளர்கள் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை நேற்று தந்தி டி.வி. யும் இன்று தினமலர் நாளிதழும், விகடன் குழுமத்தின் IPS எனும் அரசியல் விமர்சன குழுவும் வெளியிட்டுள்ளன.

இந்த முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில், கோவை தொகுதி குறித்து அவர்கள் கூறியது:-

தந்தி டிவியின் கருத்து கணிப்புப்படி, இது ஒரு இழுபறியான தொகுதியாக இருக்கும் எனவும், தற்போது இதில் திமுக வெற்றி பெற கள சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 31-37% வாக்குக்கள் பெற்று போட்டியில் அனைவரை முந்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தினமலர் நாளிதழின் கருத்து கணிப்புப்படி, பாஜக 39.70% வாக்குகள் பெற்று கோவையில் வெற்றிவாகை சூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
விகடன் குழுமத்தின் IPS எனும் அரசியல் விமர்சன குழு நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக வேட்பாளருக்கு 43.9% வாக்குகள் கிடைத்து முதலிடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
கோவை இந்த தேர்தலில் மிகப்பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை தொகுதிக்கு திமுக மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகள் பிரத்தியேகமாக கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கியுள்ளனர். 

இவை கருத்து கணிப்புகள் மட்டுமே என்பதால் மக்கள் தீர்ப்பு ஒன்றே கோவையின் மனதை தெளிவாக கூறமுடியும். எனவே ஏப்ரல் 19 ஆம் தேதி 100% வாக்களிப்போம் ... ஜூன் 4 வரை காத்திருப்போம்!