கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை மாநகராட்சி சார்பில் ஹாக்கி மைதானம் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை சென்ற மாதம் 23ம் தேதி கோவை வருவதாக இருந்தார். ஆனால் அதற்கு முந்தைய நாள் மாலை அவரின் வருகை தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது சட்டப்பேரவை கூட்டங்கள் நடைபெறுவதால் புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வார நாட்களில் அமைச்சர்கள் வெளிவர இயலாது. முதலமைச்சர் ஸ்டாலின் கூட வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகியவார இறுதி  நாட்களில் தான் உதகையில் கட்டப்பட்டுள்ள 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவனையை திறக்க வைக்க வருகிறார்.

இந்நிலையில் வரும் 13ம் தேதி (வரும் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறு) அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.