எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை பெற்றார் விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி.

 

8,849 மீட்டர் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை அடைய ஏப்ரல் 5, 2023 துவங்கிய இவரின் பயணம் இன்று வெற்றிகரமாக முடிவடைந்தது. விரைவில் இவர் தமிழகம் திரும்புவார். 

 

இந்த சாதனையை செய்த இவர் 2 குழந்தைக்கு தாய். சென்னையில் ஜப்பான் மொழி பயிற்சியாளராக உள்ளார்.

 

சிறுவயதில் இருந்து விளையாட்டு துறை மீது ஆர்வம் கொண்ட இவருக்கு வீட்டில் இததுறையில் சாதிக்க பெற்றோர் வாய்ப்பளிக்க வில்லை. எனவே தானே தனியாக இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று இப்படி பட்ட ஒரு சாதனை முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

 

இந்த சிகரத்தை ஏறவேண்டும் எனில் அவர் முதலில் 5,500 மீட்டர் கொண்ட ஏதாவது ஒரு சிகரத்தை வெற்றிகரமாக தொட்டிருக்க வேண்டும் என்பதால் 6,496 மீட்டர் கொண்ட லடாக்கில் உள்ள ஒரு சிகரத்தை தொட்டு தகுதி பெற்றார்.

 

எவரெஸ்ட் சிகரத்தை தொடும் இவர் முயற்சிக்கு மாநில அரசு ₹25 லட்சம் ஏற்பாடு செய்து தந்தது குறிப்பிட தக்கது.