கோவையில் அரசு பொருட்காட்சிகாக பணிகள் தீவிரம்!
- by CC Web Desk
- Apr 21,2025
ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் கோவையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. 26ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் கோவை வருகை தனது அக்கட்சியின் முதல் பூத் ஏஜென்ட் மாநாட்டை துவக்கி. அதற்கு மறுநாள் தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்து அரசின் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 26ம் தேதியன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு தரப்பில் பொருட்காட்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க அரங்குகள், குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற துவங்கியுள்ளன. மைதானத்தின் முன் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சென்ற வருடம் போல இந்த ஆண்டும் நுழைவு வாயில் பின்புறம் அமைக்கப்படுகிறது.
26ம் தேதி துவக்க விழாவுக்கு தயாராக இருக்கும்படி பணிகள் நடக்கிறது.